முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கில் கடவுள் ஆஞ்சநேயரை கடவுளை மனுதாரராக சேர்த்தவருக்கு அபராதம் விதித்தது டெல்லி ஐகோர்ட்

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில், கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.

டெல்லி உத்தம் நகர் பகுதியில்,தனியார் நிலத்தில் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த அங்கித் மிஸ்ரா என்பவர், அந்த சொத்தில் உள்ள கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது என்பதால், இந்த நிலம் கடவுள் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் இந்த செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக் கூடியது. மோசமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து