முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் பிறந்த நாளையொட்டி மதுரையில் ஜூன் 22-ம் தேதி தமிழக வெற்றி கழக மாநாடு

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
Vijay-4 2023 06 17

சென்னை, நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு என அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடந்து வருகிறது. இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட உள்ளது. 

அடுத்த மாதம் (ஜூன்) 22-ம் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து