முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
bus-2022 08 25

சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, வருகிற 10-ம் தேதி (இன்று ), 11-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ம் தேதி (இன்று) 425 பஸ்களும், 11-ந்தேதி (சனிக்கிழமை) 505 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி மற்றும் 11-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 985 பயணிகளும், சனிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரத்து 482 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 237 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து