முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமருக்கு உரிமை இல்லை முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசம்

வியாழக்கிழமை, 9 மே 2024      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

ஐதராபாத்:தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரதமர் மோடி குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தெலங்கானாவில் 14 மக்களவைத் தொகுதிகளையும் வெற்றி பெறுவதே காங்கிரஸின் இலக்கு, எங்களுக்கு இரட்டை இலக்கங்களில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். தெலங்கானா மக்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சியால் தெலங்கானாவுக்கு எந்த பயனும் இல்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் போதுகூட, காங்கிரஸை வெற்றிபெறச் செய்தது, தெலங்கானா மக்கள் செய்த தவறு என்று பிரதமர் கூறியிருந்தார்.

ஆனால், மூடிய கதவுகளுக்கு பின்னால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தெலங்கானா மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தெலங்கானாவுக்கு எதிராக பேசிவிட்டு, தெலுங்கானா மக்களிடமே ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு எந்த உரிமையும் இல்லை. 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை. ஆங்கிலேயர்கள் 1881-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்கி 140 ஆண்டுகள் ஆன பிறகும் நரேந்திர மோடி அதை செய்யவில்லை. ஆனால், அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

ராகுல் காந்தி எப்படிப்பட்ட மனிதர், எவ்வளவு நேர்மையானவர் என்று உலகம் முழுவதும் தெரியும். அவர் வீட்டில் மூன்று பிரதமர்கள் இருந்தார்கள். இப்படிப்பட்ட அவரது குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியல்ல, பிரதமர் பதவியையும், தன் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள அவர் முயல்கிறார்.

காங்கிரஸ் கட்சியினர் தலித் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு தருவதாக தெரிவித்து, மக்களை தவறாக வழிநடத்த பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினோம். யாருடைய இடஒதுக்கீட்டையும் நாங்கள் பறிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் வருகிற மே 13 ஆம் தேதி 4 ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) 9 இடங்களையும், பாஜக நான்கு இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் 1 இடத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து