முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ.120 குறைவு

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை:தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், நேற்று மேலும் குறைந்தது.

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், நேற்று மேலும் குறைந்தது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.120 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.88.70-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து