முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      இந்தியா
Rahul 2024-05-10

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி  அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.   

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ.250-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும்.அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். கோடீஸ்வரர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். ராகுல் காந்தி நின்றபடியே அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் பெண்களுக்கான இலவச பஸ் பயண வசதி குறித்து கேட்டறிந்தார். மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து