முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
Dog

Source: provided

சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது. 

முன்னதாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டு இருந்த அறிக்கையில், பிட்புல் டெரியர் பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா உள்ளிட்ட 23 நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 

தற்போது வளர்ப்பு பிராணியான இந்த வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் வழிகாட்டுதல்கள் தவிர்த்து 23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. 

மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தான் தமிழக அரசு இதனை அறிவித்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்பட்டதாக கால்நடை பராமரிப்புத் துறை கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து