முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்தாண்டு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.பி.எல். இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானது அல்ல: ஜெய்ஷா

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      விளையாட்டு
Jaysha 2024-05-10

Source: provided

மும்பை : ஐ.பி.எல். போட்டிகளில் கடந்தாண்டு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானது அல்ல என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

4 மாற்று வீரர்கள்...

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு அணியினால் அதிக ரன்கள் அடிக்க முடிகிறது. இதனை எதிர்க்கும் விதமாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் உள்ளிட்டோர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.

விவாதிப்போம்...

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது., இம்பாக்ட் விதிமுறைகள் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இதனால் மேலும் இரண்டு இந்தியர்கள் விளையாட முடியும் என்ற நன்மை இருக்கிறது. இருப்பினும் இது குறித்து வீரர்கள் குற்றம்சாட்டினால் இதைக் குறித்து பேசுவோம். இதுவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. உலகக் கோப்பை முடிந்தபிறகு இது குறித்து விவாதிப்போம். உலகக் கோப்பை முடிந்தப் பிறகு வீரர்கள், அணி நிர்வாகம், ஒளிபரப்பு உரிமையாளர்கள் உடன் கலந்தாலோசிக்கப்படும். இது நிரந்தரமான விதி கிடையாது. இதுவுமின்றி பயனில்லை எனில் இதை கடந்துவிடுவோம்.

கற்றுகொள்ளலாம்... 

உலகக் கோப்பைக்கு ஓய்வு எனக் கருதாமல் இதைவிட நல்ல பயிற்சி இல்லை என்றே சொல்லுவேன். இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வீரர்கள் பந்து வீசுகிறார்கள். டிராவிஸ் ஹெட்டுக்கு பும்ரா எங்கு பந்து வீச வேண்டும் எனக் கற்றுகொள்ளலாம். இதைவிட சிறப்பான வாய்ப்பு எங்கும் கிடைக்காது. மகளிர் கிரிக்கெட்டுக்கு 51 சதவிகிதமும் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு 49 சதவிகிதமும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து