முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு

திங்கட்கிழமை, 13 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.

தற்போது 7 கட்டங்களாக நடைபெற்று பாராளுமன்ற தேர்தலில் 5 ஆவது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது ராகுல் காந்தி திருமணம் குறித்து மேடையில் பதிலளித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்தது.

ராகுல் காந்தி தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும்போது இடைமறித்த கூட்டத்தினர், அவரின் திருமணம் குறித்து கோஷம் எழுப்பியதுடன், எப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போது அவரது அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது சகோதரி பிரியங்கா காந்தி எழுந்து மைக்கின் அருகே சென்றார், முதலில் மக்களின் கேள்விக்கு பதில் கொடு என்று கேலியாகக் கூறி  விட்டு சிரித்தபடியே தனது இருக்கைக்கே மீண்டும் சென்றார். அப்போது மக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல் காந்தி, "நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று மட்டும் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பும் கலகலப்பான சூழலும் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து