எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஜூன் 1-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று சி.எம்.டி.ஏ. தரப்பில் இருந்தும், போக்குவரத்து துறை தரப்பில் இருந்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிளாம்ப்பக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட்ட சில நாட்களில் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகருக்குள் உள்ள அவர்களது பணிமனையில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி கோரினர். இதனையடுத்து நீதிமன்றம் இடைகால உத்தரவாக ஜூன் 2-ம் தேதி வரை சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வர அனுமதித்தது.
இதனையடுத்து போக்குவரத்து துறை நாளை 31-ம் தேதிக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி முதல் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கபட வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முடிச்சூர் அருகே அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுத்ததில் போதிய இடவசதி இல்லை என கூறப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகை முறையில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |