முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      இந்தியா
Delhi-2024-05-31

Source: provided

புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

தலைநகர் டில்லியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் டில்லி வரவேண்டிய நீரை அண்டை மாநிலங்கள் தடுத்து நிறுத்தி விட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. அதே வேளையில் மனிதாபிமான அடிப்படையில் மக்களின் தேவைகளை தீர்க்க உதவும் படி பக்கத்து மாநிலங்களிடமும் கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் மாநிலத்தின் எதிர்கட்சியான பா.ஜ., குடிநீர் பிரச்னையை கையில் எடுத்து உள்ளது.ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் டில்லி ஜல் போர்டில் எந்த தணிக்கையும் இல்லை. 70 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. என பா.ஜ., தலைவர்களில் ஒருவரான ரமேஷ்பிதுரி தெரிவித்து உள்ளார்.

இதனிடையே டில்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள டில்லி ஜல் போர்டு அலுவலகம் பொது மக்களால் சூறையாடப்பட்டது.அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு மண் பானைகளால் அடித்து நொறுக்கப்பட்டது. பிரச்னைகளை திசை திருப்பும் நடவடிக்கை என ஆம் ஆத்மி தான் என பா.ஜ.,வும், பா.ஜ., தூண்டுதலால் தான் அலுவலகம் சூறையாடப்பட்டது என ஆம்ஆத்மியும் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் டில்லியின் துவாரகா மாவட்டத்தில் பொது குழாயில் தண்ணீரை பிடிப்பதற்காக நிகழ்ந்த மோதலில் மூன்று பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி கூறுகையில் ஆம் ஆத்மிக்கு நீர் கொள்கை என்பது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் டில்லியில் எத்தனை குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு உள்ளன என்பதை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவர்கள், பணி கொள்கையோ, எண்ணமோ இல்லாத சோம்பேறிகள், கஜானாவை கொள்ளையடிக்கும் ஆசை மட்டுமே. டில்லி மக்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து