முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலைவணங்குகிறேன்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      இந்தியா
Murmu 2023 04 18

Source: provided

புதுடெல்லி : கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலை வணங்குவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தது. 

இந்த நிலையில், கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலை வணங்குவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

கார்கில் போர் வெற்றி தினம் என்பது நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் தேசம் நன்றியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.1999-ம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரத அன்னையைப் பாதுகாக்கும் போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குகிறேன். 

அவர்களின் புனித நினைவாகப் பணிந்து வணங்குகிறேன். அவர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் அனைத்து நாட்டு மக்களும் உத்வேகம் பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத். இவ்வாறு அந்த பதிவில் ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து