முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுடன் முதல்வர் திட்டம்: 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
CM-1 2024 07 27

Source: provided

சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். 

தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் மூலமாக 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கானப்பட்டது. இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, நாகை, வேலூர் உள்ளிட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து