முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      உலகம்
America-1 2024 07 27

Source: provided

சனா : ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.   

இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது.  இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. 

இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமனின் ஹூடைடா நகரில் உள்ள விமான நிலையம் மீது இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அதே போல், ஏமனின் கமரன் தீவு மீதும் அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

முன்னதாக, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 21-ம் தேதி ஏமனின் ஹூடைடா துறைமுகம் மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து