முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருக்கு எதிராக கருத்து கூறும் விவகாரம்: முதல்வர் மம்தாவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Mamtha 2023-04-13

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்க கவர்னர் ஆனந்தபோஸ் குறித்து ஆதாரமற்ற மற்றும் அவதூறு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற அமர்வு பேச்சு சுதந்திரத்திற்குட்பட்டு கருத்து கூறலாம் என உத்தரவிட்டு உள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்., எம்.எல்.ஏ.,க்கள் சயந்திகா பானர்ஜி, ராயத் ஹூசைன் சர்கார் மற்றும் அக்கட்சி நிர்வாகி குணால் கோஷ் ஆகியோர், தன் மீது அவதூறு பரப்புவதாக அம்மாநில கவர்னர் ஆனந்தபோஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை, கடந்த 16-ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராவ், ஆக.,14 வரை கவர்னர் ஆனந்தபோஸ் குறித்து அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்க மம்தா உள்ளிட்ட 4 பேருக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' என உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி மம்தா பானர்ஜி மற்றும் குணாஷ் கோஷ் ஆகியோர் கொல்கத்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐ.பி.முகர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: பொது வாழ்க்கைக்கான கடமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறாமல் கவர்னர் ஆனந்தபோஸ் குறித்து கருத்து தெரிவிக்கலாம். இல்லையென்றால், மேல்முறையீடு செய்தவர்கள் பாதிப்பு மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து