எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை வரும் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கல்லார் – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே நேற்று முன்தினம் காலை 7.10 மணிக்கு புறப்படவிருந்த ரயிலும், உதகை – மேட்டுபாளையம் இடையே பகல் 2 மணிக்கு புறப்படவுள்ள ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
மேலும், தண்டவாளத்தில் சரிந்துள்ள பாறைகள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதில் ரயில்வே ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மண்சரிவு அகற்ற காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் சேவை வரும் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நாளை 4-ம் தேதி இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே போல உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு இன்று 3-ம் தேதி மற்றும் 5-ம் தேதி இயக்கப்பட வேண்டும் என சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், மலை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், குன்னூர் - உதகை இடையே மலை ரயில் சேவை வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |