Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியில் வெளியேற்றம்: சிறிது ஓய்வு தேவைப்படுகிறது; பி.வி. சிந்து உருக்கமான பதிவு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
2-Ram-51-copy

Source: provided

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தோல்வியுற்று வெளியேறிய பி.வி. சிந்து சிறிது ஓய்வு தேவைப்படுகிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சி தோல்வி....

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (16வது சுற்று), பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 - 19, 21 - 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

முன்னேறி செல்ல... 

தோல்விக்குப் பிறகு பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில் பி.வி.சிந்து கூறியதாவது:  இந்தத் தோல்வி எனது பாட்மின்டன் வாழ்க்கையில் மிகப் பெரியது. இதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால் வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்து முன்னேறி செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டசாலியாக... 

2 ஆண்டுகள் காயம், நீண்ட நாள்கள் போட்டி விளையாடாமல் தள்ளியே இருந்ததால் பாரீஸ் ஒலிம்பிக் எனக்கு ஒரு போர்க்களம் போலிருந்தது. சவால்கள் நிறைந்திருந்தாலும் எனது அழகான நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 3ஆவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது எனக்கு மிகுந்த பெருமையாகவும் இருந்தது. இந்த அளவில் நான் போட்டியிட்டதும் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளித்ததையும் நினைத்து நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நானும் எனது அணியும் ஒட்டுமொத்த உழைப்பையும் பாரீஸ் ஒலிம்பிக்கில் கொடுத்தோம். அதில் எந்தவித வருத்தமும் இல்லை.

சிறிய ஓய்வுக்கு பிறகு...

தற்போது, எனது வருங்காலம் குறித்து தெளிவுபடுத்துகிறேன்: நான் தொடர்ந்து விளையாடுவேன், ஆனால் ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு. எனது உடலுக்கும் குறிப்பாக எனது மனதுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. இருப்பினும் நான் போட்டிகள் குறித்து சரியாக திட்டமிட வேண்டும். நான் அதிகம் விரும்பும் பாட்மின்டனை ரசித்து விளையாட விரும்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து