எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களைகட்டியது. காவிரி, கொள்ளிடம் உள்பட தமிழகத்தில் உள்ள ஆறுகள், நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் கூடி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
தமிழ் மாதங்களில் ஆடி சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
இதையடுத்து ஆடிப்பெருக்கு வழிபாடு செய்வதற்காக காவிரி, கொள்ளிடம் உள்பட தமிழகத்தில் உள்ள ஆறுகள், நீர்நிலை பகுதிகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூடி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
பெண்கள் ஒன்று கூடி ஆற்றங்கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து படையலிட்டனர். இதன் பின்னர் மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.
புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிய மாங்கல்ய கயிறை அணிந்து கொண்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை, கொள்ளிடம் ஆறு கரைகள், ஈரோடு பவானி கூடுதுறை ஏராளமனோர் கூடி வழிபாடு நடத்தினர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வருகை புரிந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நடைபெறும் இடங்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |