Idhayam Matrimony

டிராவான முதல் ஒருநாள் போட்டி: ஏமாற்றம் அளிப்பதாக கேப்டன் ரோகித் பேட்டி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

கொழும்பு : 14 பந்துகளில் ஒரு ரன் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

சமனில் முடிந்தது...

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டி சமனில் முடிந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

231 ரன்கள் இலக்கு...

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 58 ரன்கள் எடுத்தார். இந்திய வீரர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். கே.எல்.ராகுல் மற்றும் அக்‌ஷர் இடையேயான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்களை குறைத்தது.

14 பந்துகளில் 1 ரன்.... 

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றி என்ற சூழலே நிலவியது. 14 பந்துகளில் இந்திய அணி ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா இந்தியாவின் வெற்றியைத் தடுத்தார். இதன்மூலம் ஆட்டம் சமனில் முடிந்தது.

பின்னடைவாக... 

இந்த நிலையில், 14 பந்துகளில் ஒரு ரன் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: 231 ரன்கள் என்ற இலக்கு எட்டக் கூடியதே. ஆனால், அதற்கு வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக இருந்தது. சுழற்பந்துவீச்சு தொடங்கியதும் ஆட்டம் மாறியது. கே.எல்.ராகுல் மற்றும் அக்‌ஷர் இடையேயான பார்னர்ஷிப் எங்களை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தது. இறுதியில் 14 பந்துகளில் ஒரு ரன் எடுக்க முடியாமல் ஆட்டம் சமனில் முடிந்தது ஏமாற்றமளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து