எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் காவலர் வீட்டு வசதி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் இருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கடந்த 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள தினகரன், அப்பிரிவில் ஏற்கெனவே சைலேஷ் குமார் யாதவ் வகித்து வந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
பொதுப்பிரிவு ஐ.ஜி. டி.செந்தில்குமார் மேற்குமண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ஐ.ஜி. பவானீஸ்வரி பணியமைப்பு (Establishment) பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐ.ஜி.யாக இருந்த ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணைய ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ஐ.ஜி. பி.சாமூண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவு ஐ.ஜி. ஏ.ராதிகா சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த பி.கே.செந்தில்குமாரி குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நலன் பிரிவு ஐ.ஜி. நஜ்முல் ஹோடா நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த அபிஷேக் தீக் ஷித் ரயில்வே டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கிருந்த எம்.துரை காவலர் நல டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் தேவராணி வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த சரோஜ்குமார் தாக்கூர் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறை செயலர் தீரஜ்குமார் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |