எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெருக்கூத்து ஜமாவில் பெண் வேடம் போடும் நாயகன் பாரி இளவழகன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான வேடங்களை போட்டு நடிப்பதோடு, எதிர்காலத்தில் தான் இருக்கும் தெருக்கூத்து ஜமாவை வாத்தியாராக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், அந்த ஜமாவின் வாத்தியாரான சேத்தன், அவரது வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அனைத்தையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து ஜமாவில் பயணிக்கும் பாரி, தான் நேசிக்கும் கலைக்காக வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்து, பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
அவருக்கான வாய்ப்பு கிடைத்ததா?, அவர் ஏன் அந்த ஜமாவின் வாத்தியாராக வேண்டும் என்று விரும்புகிறார்? என்பதை இயல்பாகவும், தெருக்கூத்து கலை மீது சினிமா ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும் சொல்வது தான் ‘ஜமா’
தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்கள் பற்றி சில படங்கள் பேசியிருந்தாலும், இதுவரை யாரும் சொல்லாத ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களை வெளித்திரையில் கெளரவமாக காட்டியிருப்பதோடு, படத்தோடு கலையையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.
மொத்தத்தில், ‘ஜமா’ திரை படம் சமீபத்தில் திரைக்கு வந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |