எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை : தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே திருமயம் அருகே கடையக்குடியில் நேற்று புதிய சமத்துவபுரம் கட்டுமானப் பணியை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஒரு ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். அதற்காக நனிநபர் விரோதத்தினால் நடக்கும் கொலை சம்பவத்தை அரசோடு தொடர்புபடுத்துவது தவறு. இது போன்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றாலும், தடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதனால் முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தான் செய்ய முடியுமே தவிர, ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன இருக்கிறது? என்று ஊடுருவிச் சென்று பார்க்க முடியாது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைவாகத்தான் உள்ளது. அதனால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று கூறுகிறோம்.
இம்மாதம் தமிழகத்தில் நிறைய தொழிற்சாலைகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். அமைதி பூங்காவாக இருப்பதனால்தான் தொழில் அதிபர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். புதுக்கோட்டையில் பழுதடைந்துள்ள பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |