எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டாக முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு என்று பல்வேறு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், வழக்கு விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை இதுவரை 7 முறை எந்த காரணமும் இல்லாமல் வழக்கை ஒத்திவைக்க கோரியதாக செந்தில்பாலாஜி வழக்கறிஞர் வாதிட்டார்.
செந்தில் பாலாஜி வழக்கில் நேற்றும் வாய்தா கேட்ட அமலாக்கத் துறையிடம், வாதாடுவதற்கு தயாராக இல்லை எனக்கூறி விசாரணையை தள்ளி வைக்க கோருவது என்ன மாதிரியான செயல்? என நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்ட்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு ஒத்தி வைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025