Idhayam Matrimony

442-வது ஆண்டு திருவிழா: தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Thoothukudi 2024 08 05

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா போராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழாவையொட்டி ஆலயத்தில் நேற்று கூட்டு திருப்பலி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. 

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி நேற்று  நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும்,  முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலியும்,  சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரிகளுக்காக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று பெருவிழா நிறைவு திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர்  நகர வீதிகளில் தூய பணிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெற்றது. தொடர்ந்து  தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து