முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்: தி.மு.க.வின் வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Nellie-Mayor 2024 08 05

Source: provided

நெல்லை : திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் மற்றொரு கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து  திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தி.மு.க.வை சேர்ந்த ஆறாவது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் சில கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை தி.மு.க. கட்சி தலைமை 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக அறிவித்த நிலையில், அவர் வேப்புமனு தாக்கல் செய்ய வந்தார். 

அவர் வருவதற்கு முன்பாகவே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த 6-வது வார்டு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வாங்கிக் கொண்டார். இதைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. 

அப்போது தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணனும், தி.மு.க.வுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய பவுல்ராஜ் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து இவர்களின் வேட்புமனு பரிசீலினை நடைபெற்றது. 

காலை 11:30 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இருவருமே வாபஸ் பெறவில்லை என்பதால், பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் முன்னாள் மேயராக இருந்த சரவணன் பிற்பகல் 12.10 மணிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது அவரை அதிகாரிகள் உள்ளே அனுப்ப முடியாது என தெரிவித்தனர். தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடமே உள்ள நிலையில் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது எனக் கூறி முன்னாள் மேயர் சரவணனை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சுகபுத்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்த, அதன்பின் முன்னாள் மேயர் சரவணன் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு சரவணன் அனுமதிக்கப்பட்டார்.

இதன் மூலம் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிக வாக்கு பெற்று ராமகிருஷ்ணன் மேயராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் குறைவான வாக்குகளை வாங்கி தோல்வியுற்றார்.

ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு செல்லாத வாக்கு பதிவாகியது. வெற்றியை அடுத்து ராமகிருஷ்ணனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து