Idhayam Matrimony

ஈரானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார்: இஸ்ரேல்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      உலகம்
Netanyahu-(Israeli)

ஜெருசலேம், ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்து உள்ளார்.

ஈரானில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த படுகொலை களுக்கு இஸ்ரேல்தான் காரணம் என கூறப்படும் நிலையில் அதன்மீது போர் தொடுக்க ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. 

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள் மற்றும் ஈரான் ராணுவம் ஆகியவை ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டெல்டா, யுனைடெட், லுப்தான்சா, ஏர் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளன. 

தனது குடிமக்களை அழைத்து வர இஸ்ரேல் தனது நாட்டு எல்-அல் விமான சேவை, படகுகளை பயன்படுத்தி வருகிறது.   இதற்கிடையே, போர் சூழலை தடுக்கும் விதமாக ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர், ஈரான் வெளியுறவு அமைச்சரை டெக்ரானில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறும் போது, ஈரானின் தீய சக்திக்கு எதிராக இஸ்ரேல் பலமுனை போரில் ஈடுபட்டுள்ளது. ஈரானின் எத்தகையை தாக்குதலையும் சந்திக்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து