எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி, வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் பல பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள் வீடுகள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.
ஆட்சியை ராணுவம்...
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தடைந்தார். இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் பல பகுதிகளில் தொடர் வன்முறை நிகழ்ந்துள்ளது.
440 பேர் உயிரிழப்பு...
டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடினர். ஹசீனாவுக்கு சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அந்த நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது வரை வங்கதேச வன்முறையில் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய ஊடகம்....
நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 37 உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் நேற்று செவ்வாய்க் கிழமை காலை வங்கதேசத்தில் சற்று அமைதி நிலவியதாகவும் பேருந்து, ஆட்டோ என போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாகவும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வாகனங்கள் அலுவலகத்திற்குச் செல்வதாகவும் அந்த நாட்டு இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றம்....
இதற்கிடையே வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் நேற்று (ஆக.6) கலைத்தார். முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் அதிபர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
கலீதா ஜியா விடுவிப்பு...
வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 90 நாட்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் அடுத்த 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, வரும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
தலைமை ஆலோசகர்...
இதனிடையே, வங்கதேசத்தில் இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை, ராணுவத் தளபதி நேற்று சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக, நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ், புதிய அரசின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். அவரைத் தவிற வேறு யாரையும் தங்களால் ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசை வழிநடத்த தயார் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தஞ்சம்...
முன்னதாக, வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025