Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவு: ரூ. 2 கோடி நிதி வழங்கினார் நடிகர் பிரபாஸ்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      சினிமா
Prabhas 2024 08 07

Source: provided

மும்பை : வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடையாக நடிகர் பிரபாஸ் வழங்கினார். 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து 9-வது நாளாக நேற்று மீட்பு பணி நடந்து வருகிறது. 

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, துல்கர் சல்மான், நடிகர் ஜெயரம், பகத் பாசில், நடிகைகள் ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நிதி வழங்கி இருக்கிறார்கள். 

அந்த வகையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 2 கோடியை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் வழங்கி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து