எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் காரணமாக அசாம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி நிறைவடையும் என்றும் வேட்புமனு பரிசீலனை 22-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்களவை தொகுதிக்கும் தனித்தனியாக செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025