எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் : திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் .மான்ராஜ் மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா (சேர்மன்- ராம்கோ) ஆகியோர் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்.
பக்தர்களின் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்தது. ஆடிப்பூரத்தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் செய்திருந்தது. காவல்துறையின் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேரோட்டத்தினை காண வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் .கு.ஆறுமுகம், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025