எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதில் பெசன்ட்நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நடைபாதை, யானைக்கவுணி ரெயில்வே மேம்பாலம், மெரினா லூப் சாலை கடற்கரை பகுதியில் நவீன மீன் அங்காடி, புதிய பூங்காக்கள், புதிய விளையாட்டு மைதானங்கள், புதிய பஸ் நிலையங்கள், சுரங்கப்பாதை, புதிய பாலங்கள், ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், ஆகாய நடைபாதை, ஏரி மற்றும் கால்வாய் சீரமைப்பு, தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், புதிய அலுவலக கட்டிடங்கள், அறிவுசார் மையங்கள், பொது கழிப்பிடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 104 முடிவுற்ற திட்டப்பணிகள் அடங்கும். இவை மக்கள் செயல்பாட்டுக்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டது.
இது தவிர ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் 144 பேருக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் 27 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை வழங்கி 68 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |