Idhayam Matrimony

மின்மினி விமர்சனம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      சினிமா
Minmini-Review 2024 08 12

Source: provided

ஊட்டி பள்ளி படிக்கும் கெளரவ் காளை, சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்கிறார். அதே பள்ளியில் புதிதாக சேரும் மாணவர் பிரவீன் கிஷோரை அடிக்கடி சீண்டி செல்லமாக தொல்லை கொடுக்கும் கெளரவ் காளை அவருடன் நட்பு பாராட்டவும் விரும்புகிறார். ஆனால், இதை புரிந்துக்கொள்ளாத பிரவீன்கிஷோர் அவரிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்.

மாணவர்கள் பயணிக்கும் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்ள அதில் இருந்து சக மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் கெளரவ் காளை, பிரவீன்கிஷோரை காப்பாற்றும் முயற்சியில் பலத்த காயமடைந்து இறந்து விடுகிறார். அவரது இறப்புக்கு பிறகு அவர் தன்னுடன் நட்பு பாராட்ட விரும்பியதை அறிந்துக்கொள்ளும் பிரவீன்கிஷோர், குற்ற உணர்ச்சியில் மூழ்கி, கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்

அவர் படித்த ஊட்டி பள்ளியில் சேருகிறார். அங்கு குற்ற உணர்ச்சியால் தனக்கே தெரியாமல் கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் பிரவீன்கிஷோரின் நிலையை கண்டு அதிர்ச்சியடையும் எஸ்தர் அனில், அதில் இருந்து அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதற்காக அவர் பள்ளி பருவத்தையும் தாண்டிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த பயணம் எஸ்தர் அனிலுக்கு வெற்றி பயணமாக அமைந்ததா? என்பதே ‘மின்மினி’ 

ஹலிதா சமீம் படம் என்றால் இப்படி தான் இருக்கும், இப்படிப்பட்ட விசயங்களை அவர் இப்படிதான் சொல்வார், என்று அறிந்து அவரது படங்களையும், அவரது கதை சொல்லலையும் கொண்டாடும் ரசிகர்கள், அவரது இந்த நீண்ட பயணத்தை நிச்சயம் ரசிப்பார்கள். 

மொத்தத்தில், இந்த ‘மின்மினி’ இனிதான பயணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து