எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆவார்.
2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்க வில்லை. ஏனென்றால் எதிர்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்.பி.க்கள் இல்லை. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. இதனால் ராகுல்காந்தி கடந்த ஜூன் 25-ந்தேதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு பெற்றார்.
இந்நிலையில் நேற்று டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட முதல் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆவார்.
இதற்கிடையே ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பகிர்ந்த ரோஷன் ராய் என்பவரின் பதிவில், “காங்கிரஸ் ஆட்சியின் போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது, ஆனால், பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இரு கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடு” எனத் தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இருப்பினும், கடைசியில் இருந்து 2-வது வரிசையில் அமர்ந்தது குறித்து மத்திய அரசு, ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்தோ எவ்வித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025