எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 3 ஆண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது மற்றும் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட கோவைக்கு ரூ.50 லட்சம் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் ஒரு மண்டலம், சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விருது நேற்று சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாநகராட்சி-கோவை-ரூ.50 லட்சம், சிறந்த நகராட்சி-திருவாரூர் ரூ.30 லட்சம், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை மாவட்டம்) ரூ.20 லட்சம். பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம். முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக 3 ஆண்கள் மற்றும் சிறப்பு நிகழ்வாக 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்கள் பிரிவில் நெ. கதிரவன் (ஈரோடு மாவட் டம்), ஜோஷன் ரெகோ பெர்ட் (கன்னியாகுமரி மாவட்டம்), சி.ஜெயராஜ் (கடலூர் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் செ.நிதிதா (கடலூர் மாவட்டம்), கவின்பாரதி (புதுக்கோட்டை மாவட்டம்), ச.உமாதேவி (விருதுநகர் மாவட்டம்), கா.ஆயிஷா பர்வீன் (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025