முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 18-ம் தேதி மதுரை-முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, வரும் 18-ம் தேதி மதுரை - முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு வருகிற 18-ந் தேதி ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06114) மதுரையில் இருந்து அன்றைய தினம் இரவு 7 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையமும், 11.30 மணிக்கு கோவை ரெயில் நிலையமும் சென்றடைகிறது. மறுநாள் காலை 6.45 மணிக்கு பெரம்பூர் ரெயில் நிலையம் சென்றடையும். 20-ந் தேதி நள்ளிரவு 2.45 மணிக்கு முசாபர்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரெயில் கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சூளூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, சித்தரஞ்சன், மதுபூர், ஜசித், ஜாஜா, கியூல், சமஸ்திபூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 8 பொதுப்பெட்டிகளும், 2 பார்சல் பெட்டிகளுடன் கூடிய பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து