Idhayam Matrimony

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் : அரசு போக்குவரத்து இயக்குநர் தகவல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Velankanni 2023-09-06

Source: provided

கும்பகோணம் :  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி வரும் 28-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் உள்ளிட்ட முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும், அதே போல் வேளாங்கண்ணியிலிருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் இரவு - பகல் எந்த நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன.

மேலும், மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காகச் சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் இருப்பர். எனவே, இச்சிறப்பு பேருந்து சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து