முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் துன்புறுத்தல் புகார்: கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் திடீர் நீக்கம்

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2024      சினிமா
Mukesh 2024-08-28

Source: provided

திருவனந்தபுரம் : ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ்,கேரள அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரள அரசு சார்பில் கேரள படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்ற வகையில் கொள்கை வகுப்பதற்காக, கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இதில், நடிகரும் கொல்லம் சட்டப்பேரவை உறுப்பினருமான முகேஷ், மஞ்சு வாரியர், பத்மப்பிரியா, நிகிலா விமல் உள்ளிட்ட பத்து பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகர்கள் மீது நடிகையொருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.

நடிகையின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கொல்லத்தில் உள்ள முகேஷின் இல்லம் நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி சென்றனர். முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். இதுதொடர்பகாக முகேஷ் இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்புதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து