எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், இடையூறு செய்ததாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் பத்திரிகையாளர்கள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள அரசு நியமித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நடிகைகள் பலரும் அடுத்தடுத்து பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கேரள திரைத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபியிடம், நடிகர் முகேஷ் பதவி விலக வேண்டுமா.? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தற்போது தீனி கிடைத்து உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது.
நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகாருக்கான ஆதாரங்கள் என்ன?. புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் தீர்வு செய்யும்.
நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கு வந்தேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும் போது, இந்த கேள்விகளை கேட்கலாம் என்று கூறினார்.
அதன் பின்னர் திருச்சூர் வந்த சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள், இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் கையில் வைத்திருந்த மைக்குகளை தள்ளி விட்டு, என் வழி என் சுதந்திரம் என்று கூறி விட்டு காரில் ஏறி செல்ல முயன்றார்.
அப்போது பத்திரிகையாளர்கள் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று கூறி விட்டு சென்று விட்டார். இது குறித்து கேரள பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறும் போது,
நடிகர் சுரேஷ்கோபி கூறியது பா.ஜ.க.வின் கருத்து அல்ல. பாலியல் குற்றச்சாட்டுகள் ஊடகவியலாளர்கள் வெளியிட்டது அல்ல. சுரேஷ் கோபி நடிகர் என்ற முறையில், அவரது கருத்துகளை வெளியில் கூற உரிமை உள்ளது.
ஆனால், பா.ஜ.க.வின் கொள்கைகள் எப்போதுமே நேர்மையின் பக்கம் இருக்கும். பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது என்றார்.
இந்நிலையில் தன்னை வழிமறித்த பத்திரிகையாளர்கள் மீது மத்திய மந்திரி சுரேஷ் கோபி திருச்சூர் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். பத்திரிகையாளர்கள் தனது பாதுகாப்பு அதிகாரியை கடமைகளை செய்ய விடாமல் அச்சுறுத்தியதாகவும், இடையூறு விளைவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதன்படி தன்னை காரில் ஏற விடாமல் தடுத்ததாக சுரேஷ் கோபி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சூரில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.