முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை: விஷால்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2024      சினிமா
Vishal 2023 07 01

சென்னை, ஹேமா கமிட்டி போல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

 நடிகர் விஷால் தனது 47-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:

80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத் தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத் தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும். பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். 

கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை. 

தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள். தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கூடாது. 

சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி போட்டோஷூட் எடுத்து, பெண்ணை பயன்படுத்தி விட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து