எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக அதன் முன்னாள் வீரர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்காக நியூசிலாந்து அணியை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்காக 200-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு பயனுள்ளதாக அமையும். இவரது பயணக்காலம் எதிவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆரம்பமாக உள்ளது.
ரொனால்டோ ஓபன் டாக்
உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ள ரொனால்டோ தற்போது ஒட்டுமொத்தமாக 899 கோல்கள் அடித்துள்ளார்.
விரைவில் 900 கோல்களை அடித்து சாதனை படைக்க இருக்கிறார். இந்த நிலையில், 1,000 கோல்கள் அடிக்க விரும்புகிறேன் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,"முதலில் நான் 900 கோல்களை அடிக்க வேண்டும். அடுத்து 1,000 கோல்கள் அடிக்க விரும்புகிறேன். அது தான் என் இலக்கு. என தெரிவித்துள்ளார்.
3வது சுற்றில் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், சக வீரரான லாஸ்லோ டிஜெரை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். அப்போது லாஸ்லோ டிஜெருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் ஜோகோவிச் அடுத்தசுற்றுக்கு முன்னேறினார்.
உலக சாதனை படைத்த வீரர்
இங்கிலாந்து தடகள வீரர் டிவைன் ஐஹேம் (வயது 14). இவர் இங்கிலாந்தில் உள்ள லீ வேலி தடகள மையத்தில் நேற்று நடைபெற்ற 14 வயதினருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு, வெறும் 10.30 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜமைக்காவின் சச்சின் டென்னிஸ் 10.51 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஐஹேம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இவரது வேகம் பிரபல ஓட்டப்பந்தய ஜாம்பவான் வீரரான உசைன் போல்ட்டை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். மேலும் இதேபோல் பயிற்சி மேற்கொண்டு அசத்தும் பட்சத்தில் 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.58 வினாடிகளில் முடித்த உசைன் போல்ட்டின் உலக சாதனையை அவர் முறியடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.