Idhayam Matrimony

பாகிஸ்தானில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      உலகம்
Pak 2024-08-30

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அப்பர் டிர் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் நேற்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீட்டின் மேல் சரிந்தது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து