முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் அதிபரானால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே இலக்கு : கமலா ஹாரிஸ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      உலகம்
Kamala-Harris 2024-08-30

Source: provided

வாஷிங்டன் : நான் அதிபரானால் நடுத்தர மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதே முக்கிய இலக்காக இருக்கும் என்று, கமலா ஹாரிஸ் கூறி உள்ளார்.

 அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளாராக முன்னாள் அதிபர்  டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். இருதரப்பினரும் தங்கள் வலுவான பிரசாரங்களை முன் வைத்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதிபராக வெற்றி பெறும் வாய்ப்பு கமலா ஹாரிசுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மக்கள் ஆதரவு அவருக்கு அதிகம் உள்ளதாகவும் சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இந்நிலையில் அதிபராக வென்றால் தாம் உடனடியாக செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு கமலா  ஹாரிஸ் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கமலா ஹாரிஸ் கூறியதாவது,

அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம். அதில் தான் அதிக கவனம் செலுத்துவேன். நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எனது முதல் இலக்கு. காலநிலை மாறுபாடு என்பது அதி முக்கிய மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். 

பசுமை புதிய ஒப்பந்தம் மிகவும் நெருக்கடியான மற்றும் முக்கியமான ஒன்று. எல்லைகளை பாதுகாக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் ஏற்கனவே கூறிய விஷயங்களில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.

 தேர்தலுக்கு இன்னமும் 68 நாட்கள் இருக்கின்றன. வெவ்வேறு விதமாக கோணங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கருத்துகளை ஏற்றுக் கொள்வது, பரிசீலிப்பது மிகவும் முக்கியம்.பாலினம், நிறவேறுபாடு என எதிலும் பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறந்த அதிபராக பரிணமளிக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால் தான் நான் வேட்பாளராக நிற்கிறேன். இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து