முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டி.என்.பி.எஸ்.சி.

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி தமிழக அரசின் அனைத்து துறைகள், வாரியங்கள், பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் தமிழை முழுமையாக பயன்படுத்தும் நோக்கில் தமிழ்வளர்ச்சித் துறை இயங்கி வருகிறது. 

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் இத்துறையின் தலைமை பொறுப்பில் இயக்குநரும், அவருக்கு கீழ் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவில் உதவி இயக்குநர்களும், மண்டல அளவில் (சேலம் மற்றும் திருநெல்வேலி) துணை இயக்குநர்களும் உள்ளனர்.

தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்பட உள்ளது. 

அந்த வகையில் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பி.சி., பி.சி.-முஸ்லிம், எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.) 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 3 பகுதிகளை கொண்ட இந்த தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்மொழி தாள் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து