முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்தார் சரத்பவார்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      இந்தியா
Sarath-Pawar 2023 04 24

Source: provided

மும்பை : இசட் பிளஸ் பாதுகாப்பு மூலம் தன்னை உளவு பார்ப்பதாக கூறியிருந்த சரத்பவார், பாதுகாப்பை தற்போது நிராகரித்து விட்டார். மேலும் அவர் கூடுதல் பாதுகாப்பும் வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

மகராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ.க. - தேசியவாத காங்கிரஸ்  கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 

பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாக மகா விகாஸ் அகாடி உள்ளது. இதில், காங்கிரஸ்,, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு அங்கம் வகிக்கின்றன.

சரத் பவாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அவருக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி, சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்படி, சி.ஆர்.பி.எப். எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் சரத் பவாருக்கு பாதுகாப்பு வழங்கினர். 

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், நான் யாரை சந்திக்கிறேன். எங்கு செல்கிறேன் என்பதை அறிய, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது என சரத்பவார் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று இசட் பிளஸ் பாதுகாப்பை சரத் பவார் நிராகரித்து விட்டார். டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு பணியாளர்களை நியமிப்பது, நகரத்திற்குள் அவர் பயணிக்க பயன்படுத்தும் வாகனத்தை மாற்றுவது மற்றும் அவரது காரில் இரண்டு பாதுகாப்பு பணியாளர்கள் அவரை அழைத்துச் செல்வது உள்ளிட்ட வசதிகளையும் நிராகரித்து விட்டார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து