எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திஸ்பூர் : அசாம் சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்ததற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 1937-ம் ஆண்டு அசாமில் காலணித்துவ ஆட்சிக் காலத்தின்போது, முஸ்லிம் லீக் அரசாங்கத்தின்கீழ் மாநில சட்டசபையில் வெள்ளிக் கிழமை தொழுகைக்காக 2 மணி நேரம் இடைவேளை விடும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கமானது தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி அசாம் சட்டசபையில் வெள்ளிக் கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்தார். வெள்ளிக் கிழமைகளில் 2 மணி நேரம் இடைவேளை விடப்படுவதால், முக்கிய விவாதங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தொழுகைக்கான இடைவேளை நேரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அசாம் மாநில அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அசாம் சட்டசபையில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக அமர்ந்து 2 மணி நேர இடைவேளையை ரத்து செய்வது என ஒருமனதாக தீர்மானித்தோம். அந்த இடைவேளை நேரத்தில் நாம் இன்னும் உழைக்க வேண்டும்.
1937-ல் தொடங்கிய இந்த நடைமுறை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருமித்த முடிவு. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.