Idhayam Matrimony

தாதுமணல் எடுக்க அனுமதி: திருவாரூரில் தமிழக அரசை கண்டித்து 11-ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : திருவாரூர் மாவட்டம் த.வடகாடு கிராமத்தில் தாது மணல் எடுக்க தனியாருக்கு அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து வரும் 11-ம் தேதி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் 2020-ம் ஆண்டு இயற்றப்பட்டது. 

இந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் டெல்டா மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாப்பதாகும். இந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில், த. வடகாடு கிராமங்களில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் 26 அடி ஆழத்திற்கு சிலிகான் தாது மணல் எடுத்து விற்பனை செய்ய தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். 

மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வரும் 11-ம் தேதி அன்று காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலை, த. வடகாடு த.கீழக்காடு சந்திப்பில், முன்னாள் அமைச்சர்  ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவநாராயணசாமி முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவ நாராயணசாமி மேற்கொள்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து