எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து சிவன் கோயில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி பரியேறும் பெருமாள் வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பச்சை சாத்தி கட்டளைதாரர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மல்லிகா, ராமசுப்பிரமணியம் பிள்ளை சார்பில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடந்தது. பகல் 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு அணிந்து, மரிக்கொழுந்து மாலை அணிந்து விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சாத்தி வழிபட்டனர்.
மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், சுவாமி அலைவாயுகந்தபெருமான் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருநெல்வேலி ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி மீண்டும் சிவன் கோயில் சேர்ந்தனர். விழாவின் 9-ம் நாளான இரவு 9 மணிக்கு சுவாமி குமரவிடங்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை(2-ம் தேதி) காலை 6,30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், மூன்றாவதாக வள்ளியம்மன் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |