எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிம்லா : இமாசலப்பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து 72 சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் 35, மண்டியில் 15, காங்க்ராவில் 10, குலுவில் 9 மற்றும் உனா, சிர்மௌர் மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டங்களில் தலா ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தில் 10 மின்சாரம் மற்றும் 32 நீர் வழங்கல் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை தொடங்கி தற்போது வரை மழை தொடர்பான சம்பவங்களில் 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையினால் ஏற்பட்ட சேதத்தால் மாநிலத்திற்கு ரூ.1,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. சுந்தர்நகரில் 44.8 மிமீ மழையும் அதைத் தொடர்ந்து ஷிலாரூ (43.1 மிமீ), ஜுப்பர்ஹட்டி (20.4 மிமீ), மணாலி (17 மிமீ), சிம்லா (15.1 மிமீ), ஸ்லாப்பர் (11.3 மிமீ) மற்றும் டல்ஹவுசி (11 மிமீ) மழையும் பெய்துள்ளது. செப்டம்பர் 2ஆம் தேதி மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுக்கான மஞ்சள் எச்சரிக்கையை உள்ளூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.