Idhayam Matrimony

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் : துப்பாக்கிச்சுடுதலில் ரூபினா வென்றார்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Rubina 2024-08-31

Source: provided

பாரீஸ் : பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா வென்றுள்ளார்.

இறுதிப்போட்டி...

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 

5 பதக்கங்கள்...

8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஈரான் வீராங்கனை சரே ஜவன்மர்டி 236.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கமும், துருக்கி வீராங்கனை அய்சல் 231.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து