முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோ ரூட் மீண்டும் சதம்: இலங்கைக்கு 483 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை அணி

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 483 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்ஸ்...

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கும், இலங்கை அணி 196 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 231 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். 

483 ரன்கள் இலக்கு...

அவர் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 37 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிலன் ரத்நாயகே மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இலங்கையைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 482 ரன்கள் முன்னிலை பெற்றதால், இலங்கைக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து